நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதை ஆலய நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்: டத்தோ சிவக்குமார்

ஈப்போ:

இந்து சமயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதை ஆலய நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மஹிமா தலைவர்  டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.


பேரா புந்தோங்கில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக மண்டலப் பூஜைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆலயத் தலைவர் சீதா ராமன், ஆலய நிர்வாக அழைப்பின் பேரின் இப்பூஜையில் கலந்து கொண்டேன்.

ஆலயத்தை மேம்படுத்துவதில் தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்காக, ஆலய நிர்வாகத்திற்கும் இதில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மேலும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு, பக்தியைப் பிரதிபலிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.

இந்தப் புனிதமான நிகழ்விற்கு பங்களித்த ஆலய அதன் குழு உறுப்பினர்கள், பக்தர்கள், அனைவருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் தனது தெய்வீக ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து பொழியட்டும்.

வரும் தலைமுறைகளுக்கு நமது வளமான இந்து பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில், கோயில் தொடர்ந்து வளர்ச்சி, செழிப்பு, வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset