செய்திகள் மலேசியா
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்; 113 தொகுதிகளில் ஒரே நேரத்தில் நடைபெற்றது: டத்தோ முருகையா
ஜொகூர்பாரு:
மஇகா தனது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மக்களின் நலனை மையமாகக் கொண்டு மிகப் பெரிய இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
80ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மஇகா ஏறகெனவே 146 தொகுதிகளிலும் கூட்டுப் பிரார்த்தனை, குடும்ப நாள், விளையாட்டு தினம் போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நாட்டின் 113 மஇகா தொகுதிகளில் ஒரே நேரத்தில் இலவச மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்றன.
இந்த தேசிய அளவிலான மருத்துவ முகாமின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா ஜொகூரிலுள்ள பெர்லிங் மாலில் நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மக்கள் நலப் பணிக்கான தங்களது ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினர்.
மஇகா உதவித் தலைவரும், 80ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தோ டி. முருகையா,
இன, மத, மொழி, சமூக வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து மலேசியர்களுக்கும் சேவை செய்வதே மஇகாவின் நிலையான கொள்கை எனக் குறிப்பிட்டார்.
இன்றைய மருத்துவ முகாமில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் சில வகை புற்றுநோய்கள் போன்ற ஆபத்தான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் அவசியமானவை என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2026, 10:19 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆணை அளிக்க வேண்டும்: பிரதமர்
June 28, 2026, 10:17 pm
புத்ராஜயாவில் நண்பர்கள், ஜொகூரில் நாங்கள் எதிரிகள்: ஜாஹித் ஹமிடி
June 28, 2026, 4:18 pm
எல்ஆர்டி 3; நாளை முதல் ஒரு மாதத்திற்கு இலவச சேவை: பிரதமர்
June 28, 2026, 12:30 pm
லயாங்-லயாங் தொகுதியில் உதயமானது புதிய விடியல்: மாற்றத்தை நோக்கி முழக்கமிடும் குணா பாலகிருஷ்ணன்
June 28, 2026, 12:29 pm
