நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50ஆம் ஆண்டு பொன்விழாவை நோக்கி கேகேபி கூட்டுறவு நிறுவனம்; 5 ஆண்டு மேம்பாட்டு இலக்குடன் செயல்படவுள்ளது: தங்கராஜ்

செலயாங்:

கேகேபி கூட்டுறவு நிறுவனம் அடுத்து 5 ஆண்டு மேம்பாட்டு இலக்குடன் செயல்படவுள்ளது.

அந்நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ் இதனை கூறினார்.

கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் கூட்டுறவு நாணய நிறுவனம் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக வெற்றியுடன் செயல்பட்டு வருகிறது.

இக்கூட்டுறவுக் கழகத்தின் 46ஆவது ஆண்டு பேராளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வேளையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும்  தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஒரு முன்னோடி கூட்டுறவு நிறுவனமாக உள்ளது.

பொருளாதார ரீதியில் வலுவாக இருக்கும் இக்கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களின் நலத் திட்டத்திலும் முழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த வெற்றிக்கு தொழிலாளர்களான நமது உறுப்பினர்கள் தான் காரணம் என்று அவர் கூறினார்.

கேகேபி கூட்டுறவு நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடவுள்ளது.

இதனால் இக்கூட்டுறவு நிறுவனம் அடுத்த 5 ஆண்டு மேம்பாட்டு இலக்குடன் செயல்படவுள்ளது.

குறிப்பாக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட கடன் தொகையை 30 மில்லியன் ரிங்கிட்டாகவும் 200 துணைக் குழுத் தலைவர்களை உருவாக்குவது 1000 வட்டார நிர்வாகத்தினர், 10,000 சிறுவர்கள் ஆகியவை இந்த இலக்கில் உள்ளது.

கேகேபி கூட்டுறவு நிறுவனத்தின் இந்த இலக்குகள் வெற்றி பெற அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தங்கராஜ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset