நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் இந்திய கூட்டுறவு நிறுவனங்கள் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டும்: குணராஜ்

செலயாங்:

நாட்டில் உள்ள இந்திய கூட்டுறவு நிறுவனங்கள் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

கேகேபி கூட்டுறவு நிறுவனத்தின் 46ஆம் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி.

இக்கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்கள் எண்ணிக்கை, பொருளாதார மேம்பாடு என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது.

குறிப்பாக நாட்டில் மூன்றாவது சிறந்த கூட்டுறவு நிறுவனமாக கேகேபி விளங்குகிறது.

இவ்வேளையில் அதன் நிர்வாகத்திற்கும் உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டில் அதிகமான இந்திய கூட்டுறவு கழகங்கள் உள்ளன.

இந்த கூட்டுறவு கழகங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இணைந்து மிகப் பெரிய சக்தியாக உருவாக வேண்டும்.

நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளை அரசியல்வாதிகளும் இயக்கங்களின் தலைவர்களும் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

வலுவான உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களும் அந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்திய சமுதாயத்திற்கான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைக்கலாம்.

இது நடந்தால் அடுத்த தேர்தலுக்குள் சமுதாயத்திற்கு ஏதாவது பலன் கிடைக்கும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset