நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; லயாங்-லயாங் வாக்காளர்கள் முன்னேற்றத்தையும் நிலைத்தன்மையையும் விரும்புகிறார்கள்: டத்தோஸ்ரீ ரமணன்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் லயாங்-லயாங் வாக்காளர்கள் முன்னேற்றத்தையும் நிலைத்தன்மையையும் விரும்புகிறார்கள்.

மனிதவள அமைச்சரும் கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு தற்போது அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் லயாங்-லயாங் தொகுதியில் நம்பிக்கை கூட்டணி சார்பில் குணா பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக இங்குள்ள மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறேன்.

அவ்வகையில்  வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் லயாங்-லயாங் மாநிலத் தொகுதி வாக்காளர்கள் மடானி அரசாங்கத்துடன் முன்னேற்றம், நிலைத்தன்மை, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை விரும்புகிறார்கள்.

லயாங்-லயாங் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணனுடன் வந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள், பிரச்சாரப் பணியாளர்களின் உற்சாகமான வருகையும், அசைக்க முடியாத ஆதரவும், நேர்மறையான மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்தை இது நிரூபிக்கிறது.

வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெற்றது. அதைவிட முக்கியமாக, எங்கள் பிரச்சாரக் குழுவின் உத்வேகம் ஒருபோதும் தளரவில்லை.

வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகும், அவர்கள் எங்கள் பக்கமே இருந்து, ஊக்கமூட்டும் முழக்கங்களை எழுப்பி, எங்கள் வேட்பாளருக்குத் தங்களின் முழு ஆதரவையும் அளித்தனர்.

இப்போது போர் தொடங்கிவிட்டது.

லயாங்-லயாங் மாநிலத் தொகுதியில் நம்பிக்கை கூட்டணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதே எங்கள் ஒரே குறிக்கோள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset