நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி முதிர்ச்சியான அரசியலைக் கடைப்பிடிக்கிறது; எதிரிகளைத் தாக்குவதில்லை: அஹ்மத் ஜாஹித்

பொந்தியான்:

ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான  பிரச்சாரக் காலம் முழுவதும், தேசிய முன்னணி எதிரிகளைத் தாக்காமலும், விமர்சிக்காமலும், அவதூறு செய்யாமலும் முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

நாட்டின் அரசியல் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது.
மேலும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் நன்மைகளை கண்ணியமான, விவேகமான முறையில் முன்னிறுத்துவதில் தேர்தல் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

ஜொகூரைப் பற்றி எங்களுக்கு மாறுபட்ட பார்வைகளும் கருத்துக்களும் இருந்தாலும், நாங்கள் எதிரணியைத் தாக்க மாட்டோம் என்பதே நாங்கள் ஏற்படுத்தியுள்ள புரிதல்.

ஏனெனில், நாங்கள் தேசிய அளவில் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தனது இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தேசிய முன்னணிக்கு தெளிவான நோக்கம் உள்ளது.

ஆனால் அது எதிரணியால் எழுப்பப்படும் எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்கும் கட்சியின் திறனைப் பொறுத்தது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset