செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்: புத்ரி வாங்சாவில் மஸ்லியுடன் அமிரூடின், சைபுடின் வந்தனர்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தல் வேட்புமனு தாக்கலில் புத்ரி வாங்சாவில் மஸ்லியுடன் அமிரூடின், சைபுடின் உட்பட பல தலைவர்கள் வந்தனர்.
கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, நம்பிக்கை கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் ஆகியோர் காலை 8.14 மணிக்கு இங்குள்ள பண்டார் டத்தோ ஒன் இடைநிலைப் பள்ளி வேட்புமனு மையத்திற்கு வந்தனர்.
கெஅடிலானின் கூட்டுத் தேர்தல் இயக்குநர்களான அவர்கள், புத்ரி வங்சா மாநில சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் டாக்டர் மஸ்லி மாலிக்குடன் வந்தனர்.
மஸ்லியுடன் சுமார் 100 ஆதரவாளர்களும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 9:50 am
ஜொகூர் மாநிலத் தேர்தல்: புக்கிட் கெப்போங்கில் தேசியக் கூட்டணி வேட்பாளருடன் டான்ஸ்ரீ மொஹைதின்
June 26, 2026, 8:14 pm
புவாட் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை: ஜாஹித்
June 26, 2026, 5:51 pm
