நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புவாட் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை: ஜாஹித்

கோலாலம்பூர்:

அம்னோ கட்சியிலிருந்து உடனடியாக விலகுவதாக நேற்று அறிவித்த, அக்கட்சியின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர், டத்தோ டாக்டர் முகமது புவாட் ஷர்காஷி மீது அம்னோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்காது.

துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

முன்னாள் ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் அம்னோவிலிருந்து விலக முன்வந்ததைத் தொடர்ந்து, கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று கூறினார்.

அவர் விலகிவிட்டார். எனவே எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. மேலும் அவர் அம்னோவில் இருக்க விரும்பவில்லை.

பல ஆண்டுகளாக அம்னோவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.

மேலும் டத்தோ டாக்டர் முகமது புவாட் ஷர்காஷிக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தித்திவங்சா அரங்கில் நடைபெற்ற சர்வதேச திறந்தநிலை கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைத்த பிறகு அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset