நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லிண்டுங் 24 ஜாம் திட்டத்திற்கு 3 வாரங்களில் 136 கோரிக்கைகளுக்கு ஒப்புதல்; 672,743 ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியுதவியை பெர்கேசோ வழங்கியது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ, கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ‘லிண்டுங் 24 ஜாம்’ எனப்படும் 24 மணி நேர முழு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 136 இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட பங்களிப்பாளர்களுக்கு மொத்தம் 672,743.10 ரிங்கிட் மதிப்பிலான நிதி வழங்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இது குறித்து வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வார காலத்திற்குள் பெறப்பட்ட கோரிக்கைகளில் 62.9 சதவீதத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பெர்கெசோ வேலை செய்யும் நேரத்தில் மட்டுமே பாதுகாப்பை வழங்கும் என்பது பலரின் பொதுவான புரிதலாக உள்ளது.

ஆனால், இந்த 24 மணி நேர முழு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், விடுமுறை நாட்கள் உட்பட வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட காலங்களிலும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எதிர்பாராத விபத்துகளைச் சந்திக்கும் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், முன்பு இருந்த காப்பீட்டு இடைவெளியை நாங்கள் வெற்றிகரமாக நிவர்த்தி செய்துள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழக்கூடும் என்பதால், இத்தகைய விரிவான பாதுகாப்பு அவசியமானது என்று வலியுறுத்திய அமைச்சர், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற ஆரம்பகால உதாரணங்களையும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ஜோகூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஹுஸ்னிசாம் ஹிசாமுடின் மற்றும் முகமது அமிருல் ஹாசிம் மிஸ்னோன் ஆகியோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சபா மாநிலத்தைச் சேர்ந்த பிரிஸ்டி விடலின் பெலிசியானஸ் என்ற ஊழியர், மலையேற்றத்தின் போது நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து, பெர்கெசோவின் 'ஸ்குவாட் பிரிஹாத்தின்' (Skuad Prihatin) பராமரிப்பில் உள்ளார். அதேபோல், பேராக் மாநிலத்தில் உணவு விடுதியில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்ட சென் சீ லிங் என்பவருக்கும் தகுந்த மருத்துவச் சிகிச்சையும் வருமான இழப்பீடும் வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset