நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீன்பிடிப் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி

கோலாலம்பூர்: 

கோலா தெரோங் அருகே உள்ள புலாவ் பாசிர் ஹிட்டாம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரு உள்ளூர் மீனவர்கள், நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

கோலா குராவ் கடல்சார் மண்டல இயக்குநர் முஹம்மத் ஹைரில் ஒத்மான், இருவரின் சடலங்களும் உள்ளூர் மீன்பிடிக் கப்பல் ஒன்றால் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் கோலா செப்பேத்தாங் படகுத்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், வலை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு, மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

உயிரிழந்த இருவரின் அடையாளங்களும் அவர்களது முதலாளிகளால் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைக்காக அவர்களின் சடலங்கள் மலேசிய அரச காவல் துறையிடம் (PDRM) ஒப்படைக்கப்பட்டன.

இதனையடுத்து, தேடுதல், மீட்புப் பணி (CARILAMAT) நேற்று மாலை 7.10 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset