நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ அந்தஸ்து கொண்ட போதைப்பொருள் கும்பல் தலைவன் கைது; 6.26 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: போலிஸ்

கோலாலம்பூர்:

டத்தோ அந்தஸ்து கொண்ட போதைப்பொருள் கும்பல் தலைவனை போலிசார் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

பேரா, கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர் ஆகிய பகுதிகளில்  'ஆபரேஷன் கௌரஸ்' எனும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில்  291 நபர்களைக் கைது செய்ததைத் தொடர்ந்து, டத்தோ அந்தஸ்துக் கொண்ட ஒருவரால் வழிநடத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலிசார் வெற்றிகரமாக ஒழித்துள்ளது.

ஜூன் 17 முதல் 21 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த அதிதீவிர சிறப்பு நடவடிக்கை, கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தீவிரமாக இயங்கி வந்ததாக நம்பப்படும் 6.26 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை வெற்றிகரமாக முடக்கியுள்ளது.

40 வயதுகளில் உள்ள முக்கிய சந்தேக நபர், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை வழிநடத்தியது மட்டுமல்லாமல், மாநிலங்களில் செயல்படும் ஒரு இரகசிய சமூகக் குழுவின் தலைவராகவும் இருந்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset