செய்திகள் மலேசியா
டியூக் நெடுஞ்ச்சாலையில் கார் தீ பிடித்து எரிந்ததில் இருவர் கருகி மாண்டனர்: ஒருவர் உயிர் தப்பினார்
கோலாலம்பூர்:
டியூக் நெடுஞ்ச்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் இருவர் கருகி மாண்டனர். ஒருவர் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் இன்று இங்குள்ள ஜாலான் கூச்சிங் வெளியேறும் வழியில், டூத்தா-உலு கிளாங் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
இன்று காலை 5.20 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.
அதைத் தொடர்ந்து, ஜின்ஜாங் தீயணைப்பு, மீட்பு நிலையம், ஸ்ரீ ஹர்தமாஸ் நிலையம் ஆகியவற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், ஒரு கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததைக் கண்டதாக கோலாலம்பூர் தீயணைப்புப் படையின் செயல்பாட்டு இயக்குநர் முகமது ஃபட்ஜில் ஜமாலுதீன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் மூன்று பேர் பாதிக்கப்பட்டனர்.
எரிந்து கொண்டிருந்த காருக்குள் சிக்கிய இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். மற்றொருவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 10:00 am
ஜொகூர் மாநிலத் தேர்தல்: புத்ரி வாங்சாவில் மஸ்லியுடன் அமிரூடின், சைபுடின் வந்தனர்
June 27, 2026, 9:50 am
ஜொகூர் மாநிலத் தேர்தல்: புக்கிட் கெப்போங்கில் தேசியக் கூட்டணி வேட்பாளருடன் டான்ஸ்ரீ மொஹைதின்
June 26, 2026, 8:14 pm
புவாட் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை: ஜாஹித்
June 26, 2026, 5:51 pm
