நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியப் பள்ளி விளையாட்டு மன்ற போட்டியில் கராத்தேவைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

மலேசியப் பள்ளி விளையாட்டு மன்றத்தின் விளையாட்டு போட்டியில் கராத்தேயைச் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

விளையாட்டு மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழுவின் தலைவராகவும் உள்ள அவர்,

அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்படும் என்று கூறினார்.

இந்த விவகாரம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.

இப்போட்டியில் கராத்தேவைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளுமாறு கல்வியமைச்சர் ஃபத்லினா சிடேக்கை  கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த விஷயத்தை நாங்கள் அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டு செல்வோம்.

தித்திவங்சா மண்டபத்தில் நடைபெற்ற 2026 மைலோ அனைத்துலக கராத்தே சாம்பியன் போட்டியைத் தொடங்கி வைத்த பிறகு கூறினார்.

25ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த சாம்பியன் போட்டி, 17 நாடுகளிலிருந்து 1,850க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset