நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்: புக்கிட் கெப்போங்கில் தேசியக் கூட்டணி வேட்பாளருடன் டான்ஸ்ரீ மொஹைதின்

பாகோ:

ஜொகூர் மாநில தேர்தல் வேட்புமனுவை முன்னிட்டு புக்கிட் கெப்போங்கில் தேசியக் கூட்டணி வேட்பாளர்களுடன் அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் வந்தார்.

தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், புக்கிட் கெப்போங் தொகுதியில் போட்டியிடும் தத்தமது வேட்பாளர்களுடன் கூடத் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 8 மணி முதலே பாகோ விளையாட்டு வளாகத்தில் உள்ள வேட்புமனு மையத்தைச் சுற்றி கூடத் தொடங்கினர்.

புக்கிட் கெப்போங் சட்டமன்றத் தொகுதியில், தேசியக் கூட்டணியைச்  சேர்ந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷஹ்ருடின் ஜமால், தேசிய முன்னணியைச் சேர்ந்த அஹ்மத் ஷரி யூசுப், நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த சி. சுப்ரமணி ஆகியோர் என குறைந்தபட்சம் மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுடன் வந்த ஷஹ்ருடின், காலை சுமார் 8.50 மணியளவில் வேட்புமனு மையத்திற்கு வந்தடைந்தார்.

அவருடன் வந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சென்றனர்.

சுப்ரமணியுடன், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணைய்மைச்சரும் செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். யுனேஸ்வரனும் ஆதரவாளர்களும் உடன் வந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset