செய்திகள் மலேசியா
சுபாங் ஜெயா அடுக்குமாடி குடியிருப்பில் 41 பூனைகளைப் பட்டினி போட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு RM10,000 பிணை: கடப்பிதழ் முடக்கம்
சுபாங் ஜெயா:
சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 41 பூனைகளைப் பட்டினி போட்டு அவை இறக்கக் காரணமாக இருந்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியதை அடுத்து, ஒரு பெண்மணி இன்று பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டார். ஆனாலும் அவர் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.
லீ ரியோ ஜின், அமர்வு நீதிமன்ற நீதிபதி நூர் ருசிலாவதி முஹம்மது நூர் முன்னிலையில் தனது வாதத்தை முன்வைத்தார்.
லீ, பூனைகளுக்குப் போதுமான கவனிப்பை வழங்கத் தவறியதாகவும், அவை பட்டினியால் இறக்கும் வரை போதுமான உணவு இல்லாமல் விட்டதாகவும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.
மார்ச் மாதம், சுபாங் ஜெயாவில் உள்ள USJ14-ல் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தக் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், லீக்கு RM20,000 முதல் RM100,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நீதிபதி நூர் ருசிலாவதி, ஒரு ஜாமீனுடன் RM10,000-க்கு பிணை வழங்க அனுமதித்ததுடன், வழக்கு நிலுவையில் இருக்கும்போது லீ தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 26, 2026, 8:14 pm
புவாட் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை: ஜாஹித்
June 26, 2026, 4:28 pm
தங்கம் மீண்டும் 600 ரிங்கிட்டை எட்டுமா?: புதிய பொருளாதார ஊக்கிக்காக காத்திருக்கும் சந்தை
June 26, 2026, 3:34 pm
ஜோகூர் மாநில தேர்தல் வேட்புமனுத் தினத்திற்காக முக்கிய சாலைகளை காவல்துறை மூடுகிறது
June 26, 2026, 3:16 pm
