நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் மாநில தேர்தல் வேட்புமனுத் தினத்திற்காக முக்கிய சாலைகளை காவல்துறை மூடுகிறது

ஜோகூர் பாரு: 

நாளை 16ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள வேட்புமனுத் தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள பல முக்கிய சாலைகள் மூடப்படும் என்று ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துர் ரஹ்மான் அர்சாட் கூறினார்.

பாதுகாப்பு, நியமனச் செயல்முறையை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காகவே இந்த சாலைகள் மூடப்படுகின்றன அல்லது  திருப்பிவிடப்படுகின்றன என்று அவர் கூறினார்.

ஜொகூர் பாரு, கூலாய், பத்து பஹாட், மூவார், க்ளுவாங் ஆகிய இடங்களில் இதுவரை 19 சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன  என்றார் அவர்.

ஜோகூர் பாருவில் ஜாலான் உத்தாமா டத்தோ ஒன், ஜாலான் அயர் மோலெக், குலாயில் ஜாலான் பெர்சியாரான் இந்தபுரா 6, பத்து பஹாட்டில் ஜாலான் ஓமர், மூவாரில் ஜாலான் அராப், ஜாலான் பெட்ரி, ஜாலான் டத்தோ தியோ சிவ் கோர், ஜாலான் சுல்தான் ஆகிய சாலைகள் மூடப்படுகின்றன.

பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவும், தேவைப்பட்டால் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் கடந்தகால தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில், 17 மாநிலத் தொகுதிகளில் உள்ள 22 இடங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அப்துர் ரஹமான் கூறினார்.

வேட்புமனுத் தாக்கல் நாளன்று, பாதுகாப்பைப் பராமரிக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொது ஒழுங்கைக் கண்காணிக்கவும், சட்டத்தை அமல்படுத்தவும் மொத்தம் 4,832 காவல்துறைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

அரசியல் கட்சி ஆதரவாளர்கள் முதிர்ச்சியுடனும் ஒழுங்குடனும் நடந்துகொள்ளவும், சட்டத்திற்குக் கீழ்ப்படியவும், பொது ஒழுங்கைக் குலைக்கக்கூடிய ஆத்திரமூட்டும் செயல்கள் அல்லது கூட்டங்களைத் தவிர்க்கவும் வேண்டும் என்றும் அப்துர் ரஹ்மான் நினைவூட்டினார்.

தேர்தல் ஆணையம், வேட்புமனுத் தாக்கல் நாளாக ஜூன் 27-ஐயும், முன்கூட்டியே வாக்களிக்கும் நாளாக ஜூலை 7-ஐயும், வாக்குப்பதிவு நாளாக ஜூலை 11-ஐயும் நிர்ணயித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset