நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களுக்குக் குறைந்த வாடகையில் மேலும் அரசாங்க வீடுகள்: பிரதமர் அறிவிப்பு

டெங்கில்: 

அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களில் மேலும் பல குடியிருப்புகளை அமைத்து, குறைந்த வாடகை விகிதத்தில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், ஜொகூர், கோலாலம்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணங்களின் போது, அதிகரித்து வரும் வீட்டு வாடகை அரசு ஊழியர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதை நேரடியாகக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

அரசு ஊழியர்களின் சம்பளம் 15 முதல் 30 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருந்தாலும், ஜொகூர் பாரு, கோலாலம்பூர், சிரம்பான், ஈப்போ போன்ற நகரங்களில் அதிகரித்துள்ள வீட்டு வாடகை காரணமாக அந்த உயர்வு போதுமான நிவாரணத்தை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இன்று டெங்கிலில் உள்ள மஸ்ஜித் ஜாமியத்துஸ் சோலேஹா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்ற பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset