நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'Kesejahteraan Dinikmati': 2026 தேசிய தினம், மலேசியா தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருள் அறிவிப்பு

புத்ராஜெயா: 

2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினம், மலேசியா தினக் கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக 'Kesejahteraan Dinikmati' என்ற கருப்பொருளை அமைச்சரவை இன்று அங்கீகரித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சரும், மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், இந்தக் கருப்பொருள் முன்னேற்றம், ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய நலவாழ்வு கொண்ட மலேசியாவை உருவாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், 'மலேசியா மடானி' சின்னம் இந்த ஆண்டும் தேசிய தினம், மலேசியா தினக் கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக தொடரும் என்றும், அதனுடன் இணைந்து புதிய கருப்பொருள் இவ்வாண்டு கொண்டாட்டங்களின் பிரதான அடையாளமாக அமையும் என்றும் கூறினார்.

மேலும், நலவாழ்வு என்பது குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமல்லாமல், அனைத்து மலேசிய மக்களும் சமமாக அனுபவிக்க வேண்டிய உரிமை என்பதே இந்தக் கருப்பொருளின் மையக் கருத்து என்றும் அவர் விளக்கினார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2026 தேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் விமரிசையாக நடைபெறும் என்றும் அறிவித்தார்.

அதேவேளை, தேசிய தினக் கொண்டாட்டத்தில் அனைத்து மலேசியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, தேசப்பற்று, ஒற்றுமை, தேசிய உணர்வை வெளிப்படுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

"எளிமையான முறையில் நடத்தப்பட்டாலும், கொண்டாட்டத்தின் சிறப்பும் உற்சாகமும் எவ்விதத்திலும் குறையாது," என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் உறுதியளித்தார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset