செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்: 33 தொகுதிகளில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி, தேசியக் கூட்டணி இடையே மோதல் ஏற்படலாம்
ஜொகூர்பாரு:
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் 33 தொகுதிகளில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி, தேசிக கூட்டணி ஆகியவை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகிய கட்சிகள் அனைத்து 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
அதேசமயம், தேசியக் கூட்டணி தான் போட்டியிடும் 33 தொகுதிகளை பெர்சத்து, பாஸ், பெஜுவாங், மலேசிய இந்திய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையே பகிர்ந்தளிக்கிறது.
நேற்று இரவு தேசியக் கூட்டணி கட்சிகள் தனித்தனியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் முழுப் பட்டியலின் அடிப்படையில் பெர்சத்து 16 இடங்களில் போட்டியிடுகிறது.
பாஸ் (11), எம்ஐபிபி (5) பெஜூவாங் ஒரு தனி இடத்திலும் கம்பீர் மாநிலத் தொகுதியில் போட்டியிடும்.
கெமெலா, புக்கிட் கெபோங், புக்கிட் பாசிர், செரோம், புக்கிட் நானிங், செமராங், பரிட் ராஜா, செங்கராங், ரெங்கிட், லாயாங்-லயாங், தெங்கரோஹ், பான்டி, செதிலி, ஜோகூர் லாமா, பெனாவர், ஸ்டுலாங் ஆகிய 16 இடங்கள் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி, பெர்சத்து இடையே போட்டியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:40 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
