நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ ஐஆர்சி திடல் விவகாரம்; வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: தியாகேஸ்

புத்ராஜெயா:

ஈப்போ ஐஆர்சி திடல் விவகாரத்திற்கு வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர்  தியாகேஸ் இதனை கூறினார்.

ஈப்போ வட்டாரத்தில் மிக முக்கியமான திடலாக ஐஆர்சி திடல் விளங்குகிறது. 1952ஆம் ஆண்டு முதல் இந்த திடல் இங்கு உள்ளது.

இந்த திடலில் இருந்து  பல தேசிய, மாநில கால்பந்து விளையாட்டாளர்கள் உருவாகியுள்ளனர்.

இப்படி வரலாற்றுமிக்க இந்த திடலின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இங்குள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் ரிங்கிட் வரை செலவு செய்துள்ளனர்.

ஆனால் பெரிய அளவில் எந்தவொரு மேம்பாடும் இல்லை. குறிப்பாக இந்த திடல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதன் அடிப்படையில் தான் பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவு புத்ராஜெயாவில் உள்ள வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சிடம் மகஜர் ஒன்றை வழங்கியது.

ஈப்போ ஐஆர்சி திடலை அமைச்சு உடனடியாக மேம்படுத்த வேண்டும். அதற்கான நிதியை அமைச்சு ஒதுக்க வேண்டும்.

அதே வேளையில் இந்த திடலை முரையாக பராமரிக்க வேண்டும். இதன் மூலம் இத்திடல் உள்ளூர் மக்களால் முழுமையாக பயன்படுத்த முடியும்.

ஆகவே எங்களின் கோரிக்கையை அமைச்சு கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தியாகேஸ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்






தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset