செய்திகள் மலேசியா
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
புத்ராஜெயா:
மானியமில்லா ரோன் 95, ரோன் 97 ஆகியவற்றின் சில்லறை விலை, ஜூலை 1 முதல் ஜூலை 8 வரையிலான காலகட்டத்திற்கு 10 சென் குறைந்துள்ளது.
மானியமில்லா ரோன் 95-இன் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 3.37 ரிங்கிட்டாகவும், ரோம் 97-இன் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 4.00 ரிங்கிட்டாகவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்திற்கு, மானியமில்லா டீசலின் சில்லறை விலையும் 10 சென் குறைந்து ஒரு லிட்டருக்கு 3.97 ரிங்கிட்டாக உள்ளது.
மேற்கு ஆசிய நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் பதிவான உச்சங்களுடன் ஒப்பிடுகையில், சர்வதேச பெட்ரோலிய சந்தை விலைகள் தொடர்ந்து மிதமாகவே உள்ளன.
உலகளாவிய விநியோக ஓட்டத்தில் மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாலும், மோதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளின் அபாயத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளாலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
