நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்

செந்தோசா:

ஜொகூர் மாநிலத்தில்  நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தல் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கத் தயாராகும் இவ்வேளையில், எதிர்காலத்தையும்  குழந்தைகளின் எதிர்காலத்தையும் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், கல்வி, தொழில்முனைவு, திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகள், சமூக மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்திய சமூகத்திற்கு உண்மையான ஆதரவை வழங்கியுள்ளது.

இந்த முன்னேற்றம் தொடர வேண்டும்.

இதனால் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது.

அனைத்து மலேசியர்களுக்கும் வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து கொண்டுவரக்கூடிய ஒரு நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதில் ஜொகூர் இந்தியர்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.

நாடு சரியான திசையில் பயணிக்கும்போது, ​​நமது எதிர்காலத்துடன் சூதாடகக் கூடாது.

ஆகவே வாக்காளர்கள் நிலைத்தன்மை, முன்னேற்றம், ஒற்றுமையைத் தேர்ந்தெக்க வேண்டும்.

பிரதமருக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

குறிப்பாக அனைத்து நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும்.

நாம் ஒன்றிணைந்து, வலிமையான, மேலும் ஒன்றுபட்ட மலேசியாவைக் கட்டியெழுப்ப முடியும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset