செய்திகள் மலேசியா
விரைவில் மலேசிய சுற்றுலாத்துறை மீண்டு வரும்
கோலாலும்பூர்:
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாக ஆண்டின் நடுப்பகுதியில் சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்தபோதிலும், மலேசியாவின் சுற்றுலா மந்தநிலை 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மாறும் என்றும், ஆண்டு இறுதிக்குள் சர்வதேசப் பயணிகளின் வருகை பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைகளைத் தாண்டும் என்றும் ஃபிட்ச் சொல்யூஷன்ஸின் ஒரு பிரிவான பிஎம்ஐ (BMI) கணித்துள்ளது.
இந்த ஆண்டு மலேசியா 27.97 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளைப் பெறும் என்று பிஎம்ஐ கணித்துள்ளது. இது 2025-ஆம் ஆண்டை விட 5.1 சதவீதம் அதிகமாகவும், 2019-ஆம் ஆண்டின் பெருந்தொற்றுக்கு முந்தைய அளவை விட 7.2 சதவீதம் அதிகமாகவும் இருக்கும்.
"மலேசியாவின் சுற்றுலாத் தலண்களுக்கான கவர்ச்சி குறையவில்லை. பார்வையாளர்களை அது வெகுவாக ஈர்த்து வருகிறது. ஆனால், மத்திய கிழக்கு மோதல், உயர்ந்த விமானக் கட்டணங்கள், தடைபட்ட விமானப் பாதைகள் போன்ற தற்காலிகக் காரணிகளின் விளைவாகவே இந்த பலவீனத்தை நாங்கள் காண்கிறோம்," என்று அந்த அறிக்கை கூறியது.
சீன நாட்டினருக்கான மலேசியாவின் விசா இல்லாத கொள்கை (டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது), 'விசிட் மலேசியா 2026' பிரச்சாரத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட விமான இணைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சீனாவிலிருந்து வரும் வருகை ஆண்டுக்கு ஆண்டு 21 சதவீதம் அதிகரித்து 1.87 மில்லியன் பார்வையாளர்களை எட்டியதாக BMI கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:40 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
