செய்திகள் மலேசியா
11 மாதக் குழந்தை மரணம்: விசாரணைக்கு உதவ குழந்தை பராமரிப்பாளர் கைது
சுங்கைப்பட்டாணி:
கடந்த ஜூன் 22ஆம் தேதி பெடோங்கில் உள்ள தனது குழந்தை பராமரிப்பாளர் வீட்டில் உணவருந்தும்போது தவறி விழுந்ததாகக் கூறப்படும் 11 மாதப் பெண் குழந்தை இன்று உயிரிழந்தது.
கோல மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ராம்லான் இதனை கூறினார்.
இன்று காலை அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டதாகக் கூறினார்.
கடந்த ஜூன் 22 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தைக்கு மதியம் 2.15 மணிக்கு ஆயாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில், குழந்தைக்கு உணவூட்டும்போது நாற்காலியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
குழந்தை சுயநினைவின்றி இருப்பதாகவும் குழந்தை பராமரிப்பாளர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக 30 வயதுகளில் உள்ள ஒரு பெண்ணை போலிஸ் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:40 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
