நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

‘பப்ளிக்’ படத்தின் சுவரொட்டியை வெங்கட் பிரபுவும் விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள் 

சென்னை:

நடிகர் சமுத்திரக்கனி காளி வெங்கட்டுடன் இணைந்து ‘பப்ளிக்’ படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் ரா.பரமன் இப்படத்தை இயக்க, இமான் இசையமைத்துள்ளார். கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் சுவரொட்டியை இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த சுவரொட்டியில் சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத் இஸ்மாயில் சாயபு உள்ளிட்ட பல மக்கள் தலைவர்கள் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

சமூக மாற்றத்திற்காக போராடிய தலைவர்கள் படங்கள் முதல் பார்வை சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது, படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset