செய்திகள் கலைகள்
இயக்குனர் அமீர் பருத்தி வீரனில் அறிமுகப்படுத்திய நாட்டுப்புற பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
மதுரை:
பிரபல கிராமிய பாடகியும் பருத்திவீரன் திரைப்பட பாடகியுமான லட்சுமி அம்மாள்(75) வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவுக் காரணமாக செவ்வாய் இரவு காலமானார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். இவர் ஆரம்பத்தில் பரவை முனியம்மாளுடன் இணைந்துதான் தென்மாவட்டங்களில் நடக்கும் கச்சேரிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி வந்தார்.
பரவை முனியம்மாள் தூள் திரைப்படம் மூலம் புகழ் அடைந்த நிலையில், லட்சுமி அம்மாள் தனியாக கச்சேரி நடத்தி வந்தார்.
இந்த நிலையில், 2007 இல் திரைப்பட இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் "ஊரோரம் புளிமரம், டங்கா டுங்கா" ஆகிய பிரபலமான நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் திரையில் தோன்றியும் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், 2016 இல் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அவரால் முன்புபோல் கச்சேரியில் பாட முடியாத நிலையில் 6 திரைப்படங்களோடு அவரது திரைப்பட ஆசைக்கும் கச்சேரிகளுக்கும் முடிவு ஏற்பட்டது.
தொடர்ந்து தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும் அவரால் ஆரோக்கியத்தை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில், வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய் இரவு லட்சுமி அம்மாள் காலமானார்.
20 வயதில் கும்மி பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, தெம்மாங்கு, பக்தி, நாட்டுப்புறப் பாட்டு என கலக்கி வந்த லட்சுமி அம்மாளின் மறைவு நாட்டுப்புறக் கலையுலகிற்குப் பேரிழப்பாகும்.
இவரது மறைவுக்கு திரையுலகினரும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 8:07 pm
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்
May 24, 2026, 3:40 pm
மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் அமீர்
May 21, 2026, 5:29 pm
மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்கிறார் ராதிகா
May 19, 2026, 9:36 pm
இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்தது
May 14, 2026, 5:07 pm
கருப்பு வெளியீடு ரத்தானது குறித்து ஆர்ஜே பாலாஜி கண்ணீர்
May 13, 2026, 5:17 pm
இயற்கையும் கலையும் கை கோர்க்கும் அதிசயம்: திறந்தவெளி கலை அரங்காக மாறும் லங்காவி
May 7, 2026, 6:14 pm
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்: வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்
May 7, 2026, 11:49 am
ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி
May 5, 2026, 9:43 pm
