நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன்  செய்யும் நயன்தாரா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்  

ஹைதராபாத்:

நடிகை நயன்தாராவின் தெலுங்குப் பட புரமோஷன் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா ‘மன ஷங்கர வரபிரசாத காரு’ எனும் தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.

ஷைன் ஸ்கீரின்ஸ் அன்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.

பொங்கலை முன்னிட்டு இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜன.12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான புரமோஷனில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

தமிழில் புரமோஷன்களில் நடிக்காமல் இருக்கும் இவர் ஏன் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடிக்கிறார் என சிலரும் அது அவரது தனிப்பட்ட விருப்பமென சிலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் அஜித்தும் தனது படங்களின் புரமோஷனில் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset