நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில பெர்சத்துவின் 16 வேட்பாளர்களில் அப்பா - மகன், முன்னாள் நாடாளுமன்றத் துணை சபாநாயகரும் அடங்குவர்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநில பெர்சத்துவின் 16 வேட்பாளர்களில் அப்பா - மகன், முன்னாள் நாடாளுமன்றத் துணை சபாநாயகரும் அடங்குவர்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, பெர்சத்து கட்சி தனது 16 வேட்பாளர்களை அறிவித்தது.

இதில் 59 வயதான ரஸ்மான் இத்னைன், அவரது மகன் 35 வயதான முகமது அலியாஸ் ரஸ்மான் ஆகியோர் முறையே செடிலி, பந்தி மாநில சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் துணை சபாநாயகரான டத்தோ ரஷீத் ஹஸ்னான், செங்காராங் சட்டமன்றத் தொகுதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவர் கெஅடிலான் வேட்பாளர் ஒன் அபு பக்கரை எதிர்கொள்வார்.

இதன் மூலம், பத்து பகாட் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட மோதல் மீண்டும் நிகழ்கிறது.

மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர், சமீபத்தில்தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த முன்னாள் அம்னோ மாநில சட்டமன்ற உறுப்பினர் அப்துல் முத்தலிப் அப்துல் ரஹீம் ஆவார்.

இவர் லயாங்-லயாங் மாநிலத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தேசியக் கூட்டணி சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிடுகிறார்.

முன்னாள் ஜொகூர் மந்திரி புசார் டத்தோ டாக்டர் ஷாருடின் ஜமாலுக்கு, கடந்த பொதுத் தேர்தலில் அவர் வென்ற புக்கிட் கெபோங் மாநிலத் தொகுதியைப் பாதுகாக்கும் பணி வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset