நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டல்லாஸ்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 32க்கு ஜப்பான் அணியினர் முன்னேறியுள்ளனர்.

டல்லாஸ் அரங்கில் நடைபெற்ற எப் பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான், சுவீடன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின.

தாக்குதல், தற்காப்பில் சிறப்பாக செயல்பட்டன. இதனால் முதல் பாதி முழுவதும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இடைவேளைக்குப் பிறகு தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜப்பான், 56ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுத்த சுவீடன், 62ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.

அதன்பிறகு வெற்றிக்கான 2ஆவது கோலை அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.

இருப்பினும் கடைசி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset