நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் கூட்டணி அரசாங்கம் அமையாது: ஓன் ஹபிஸ்

ஜொகூர்பாரு:

மீண்டும் மாநிலத்தை ஆளும் பொறுப்பு வழங்கப்பட்டால், தேசிய முன்னணி மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது.

ஜொகூரின் தற்காலிக மந்திரி புசார் ஓன் ஹபீஸ் காஸி இன்று இதனை உறுதியளித்தார்.

16ஆவது மாநிலத் தேர்தலுக்கான ஜொகூர் தேசிய முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு விழாவில் பேசிய ஓன் ஹபிஸ், தனித்துப் போட்டியிடும் தனது முடிவில் கட்சி உறுதியாக இருக்கும்.

எனவே நாம் அனைவரும் சேர்ந்து எடுத்த நிலைப்பாட்டையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், இந்த நிலைப்பாடு மாறாது.

கனல்கள் கரியாகும் வரை அதைப் பற்றிக்கொள்ளுங்கள் என்று ஜொகூர் அம்னோ தலைமையகத்தில் அவர் கூறினார்.

அரசியல் அணுகுமுறைகள், சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது இனவாத அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் வலியுறுத்தி, ஜசெகவுடன் இணைந்து பணியாற்ற தேசிய முன்னணி மறுத்ததை ஓன் நியாயப்படுத்தினார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே  மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி வரும் ஜொகூர் தேர்தலில் மாச்சாப் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset