செய்திகள் மலேசியா
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல்களின் விலைகள் 25 சென் குறைந்தது
புத்ராஜெயா:
மானியமில்லா ரோன் 95, ரோன் 97 ஆகியவற்றின் சில்லறை விலை, ஜூன் 25 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் 25 சென் குறைந்துள்ளது.
மானியமில்லா ரோன் 95 பெட்ரோலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 3.47 ரிங்கிட்டாகவும்,
ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 4.10 ரிங்கிட்டாகவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், தீபகற்பப் பகுதிகளில் டீசலின் சில்லறை விலையும் ஒரு லிட்டருக்கு 30 சென் குறைந்து 4.07 ரிங்கிட்டாக உள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மிதமாகியதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் சந்தையில் மேலும் ஊக்கமளிக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்களில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் இந்தக் குறைவு பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சு கூறியது.
கிழக்கு மலேசியாவில் புடி மடானி ரோன், டீசலுக்கான மானிய விலையானது, முறையே ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட், ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற அளவில் மாற்றமின்றி உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:47 pm
ஜொகூரில் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் கூட்டணி அரசாங்கம் அமையாது: ஓன் ஹபிஸ்
June 24, 2026, 6:46 pm
ஜொகூர் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டி: ரவீன்குமார் கெமெலே தொகுதியில் களமிறங்குகிறார்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
