செய்திகள் மலேசியா
ஏஐ காணொளியில் பரப்பப்படும் அவதூறு தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது: ஃபட்லினா சிடேக்
புத்ராஜெயா:
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரப்பப்பட்ட, அவதூறான, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டதாகக் கூறப்படும் ஒரு காணொளி குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டது.
கல்வியமைச்சரும் கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி, சட்ட விதிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுப்பார்கள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த காணொளியின் உள்ளடக்கம், தீய நோக்கத்துடனும் என் மீது அவதூறு பரப்புவதாகவும் இருப்பதால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.
அந்த காணொளியைப் பரப்புவது தீய நோக்கமுடையதுடன், என் கௌரவத்தைக் கெடுத்து, என் நற்பெயரை அழிக்கும் ஒரு முயற்சியாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:50 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல்களின் விலைகள் 25 சென் குறைந்தது
June 24, 2026, 8:47 pm
ஜொகூரில் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் கூட்டணி அரசாங்கம் அமையாது: ஓன் ஹபிஸ்
June 24, 2026, 6:46 pm
ஜொகூர் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டி: ரவீன்குமார் கெமெலே தொகுதியில் களமிறங்குகிறார்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
