நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் வவாசான் கட்சி போட்டியிடாது: ஹம்சா

கோலாலம்பூர்:

தற்போது வவாசான் நெகாரா என அறியப்படும் பார்ட்சி சிந்தா மலேசியா கட்சி வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

இருப்பினும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று வவாசான் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

பங்கேற்கவில்லை என்பதன் பொருள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்பதல்ல.

எதிர்காலத்தில் ஜொகூர் மாநிலத்தை நிர்வகிக்கத் தகுதியுள்ள வேட்பாளர்களின் வரிசையை நாங்கள் ஆதரிக்கிறோம்.

நாம் யாருக்கு ஆதரவளிப்போம் என்பதைத் தெரிவிக்க, தேசியக் கூட்டணி உச்ச மன்றம் விரைவில் கூடும்போது இதை நான் அறிவிப்பேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக  கடந்த திங்கட்கிழமை, வவாசான், பெஜுவாங் ஆகியவை தேசியக் கூட்டணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset