நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான டிரா மலேசியாவின் 10 பரிந்துரைகள்: டத்தோ சரவணன்

கோலாலம்பூர்:

ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான டிரா மலேசியாவின் 10 பரிந்துரைகளை முன்வைக்கிறது.

டிரா மலேசியாவின் தலைவர் டத்தோ சரவணன் சின்னப்பன் இதனை கூறினார்.

கடந்த ஓரிரு தசாப்தங்களில் பெரும்பான்மை மலேசிய இந்திய மக்கள் தோட்டப்புறங்களில் வசித்த நிலை பெருமளவு மாறி இன்று பெரும்பான்மை இந்தியர்கள் நகர்புறங்களுக்கும் புறநகர் பகுதிகளுக்கும் தங்களது வசிப்பிடங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

இம்மாற்றம் கல்வி, நிபுணத்துவம், வணிகம், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் வளர்ச்சி, பொது சேவை, அரசியல், கல்வியியல் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பல இந்தியர்களை உருவாக்கியுள்ளது.

ஆயினும், பல வருடங்களாக இந்திய சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து பணியாற்றி வருவதால், நமது சமூகத்தில் இன்னும் ஒரு பகுதியினர் நகர்ப்புற வறுமை, அடிப்படை கல்வியை நிறைவு செய்யாத நிலை, வேலைவாய்ப்பின்மை, நிரந்தர வேலையின்மை, குடியுரிமை, அடையாள ஆவணப் பிரச்சினைகள், போதைப்பழக்கம், சமூகச் சீர்கேடுகள், பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்ற பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை டிரா மலேசியா நன்கு அறிந்துள்ளது.

சமூக முன்னேற்ற வாய்ப்புகள் மக்களை சென்றடையாமல் இருப்பதும் இதில் அடங்கும்.

சமூக மேம்பாடு, கொள்கை ரீதியிலான மாற்றங்கள், கல்விதிட்டங்கள், அடையாள ஆவணம் மற்றும் குடியுரிமை தொடர்பான உதவிகள் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான டிரா மலேசியாவின் அனுபவத்தைக் கொண்டு ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான 10 பரிந்துரைகளை டிரா மலேசியா முன்வைத்துள்ளது.

அவை பின்வருமாறு:
1. ஜொகூர் மாநிலத்தில் 4 மக்கள் சேவை மையங்களை உருவாக்குதல்.
அடையாள ஆவணம் மற்றும் குடியுரிமை தொடர்பான உதவிகள், மனநலம் மற்றும் சட்ட ஆலோசனை, கல்வி ஆலோசனைகள், இளைஞர் மேம்பாடு, மகளிர் ஆளுமை மேம்படுத்துவது, குடும்ப மேம்பாடு, திறன் பயிற்சி, தொழில்நுட்ப, தொழிற்கல்வி பயிற்சி, வேலை வாய்ப்புகள், தொழில்முனைவோர் மேம்பாடு, சமூகநல உதவிகள், சுகாதாரம், சமூகப் சீர்கேடுகளைத் தடுப்பு, சமூக முன்னேற்றம் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றை முன்னெடுக்கும் கூட்டமைப்பாக இந்த சேவை மையங்கள் இயங்குவதுடன்; மக்களுக்கும் அரசு மற்றும் அரசுசார அமைப்புகளுக்கும், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைக்குமான பாலமாகவும் இந்த சமூக சேவை மையங்கள் இருக்க வேண்டும்.
1. வணிக வளர்ச்சி, தொழில்முனைவோர் மேம்பாட்டு வாய்ப்புகள்.
நிதியுதவிகள், மானியங்கள், பயிற்சிகள், வழிகாட்டுதல், டிஜிட்டல் சந்தைப்படுத்தும் முறை, புதிய தொழில் முனைவோர் உருவாக்கத்தை ஊக்குவித்தல் தனியார் மற்றும் அரசு அமைப்புகளின் மூலம் கொள்முதல் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்.
1. வேலை வாய்ப்பு, தொழிற்திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள்
தொழிற்திறன் பயிற்சி, திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சி, தொழிற்பயிற்சி, அதற்கேற்ற வேலை வாய்ப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
1. வீட்டுரிமை, சமூக நகர்வு
மலிவு விலை வீடுகள், செந்த வீட்டுரிமை திட்டங்கள் மற்றும் சமூக நகர்வை மேம்படுத்தும் திட்டங்களை அதிகரித்தல்
1. அனைவருக்கும் அடிப்படை கல்வி என்ற உத்தரவாதம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு
கல்விக்கான உதவிகள், உபகார சம்பளங்கள், தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்துதல் மற்றும் பள்ளி படிப்பை இடையில் நிறுத்துவேரின் எண்ணிக்கையை குறைப்பது போன்றவற்றை உள்ளடக்கிய தரமான கல்வி முறையை உறுதி செய்தல்.
1. குடியுரிமை, அடையாள ஆவணம்
குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சனைகளுக்கான தீர்வை துரிதப்படுத்துவதுடன் அத்தியாவசிய தேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்தல்
1. கொள்கை உருவாக்கம், நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம்
அரசாங்கக் குழுக்கள், சட்ட அமைப்புகள், அரசாங்க இணை நிறுவனங்கள் (GLC) மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் (PBT) இந்திய சமூகத்தின் பங்கேற்பை அதிகரித்தல்.
1. வழிபாட்டுத் தலங்கள், சமூக அமைப்புகள்
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குதல்.
1. மனித மூலதன மேம்பாடு, இளைஞர் வளர்ச்சி, குடும்பநலனை அதிகரித்தல்
இளைஞர் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, குடும்ப நலன், மனநலம், தலைமைத்துவம் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளடக்கிய திட்டங்களை செயல்படுத்துதல்.
1. ஜொகூர் மாநிலத்தில் சமூக மேம்பாட்டு குழுவை உருவாக்குதல்
சமூக மேம்பாட்டிற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்பார்வை செய்து செவ்வனே, வழிநடத்தும் குழுவென்றையும் நிறுவ வேண்டும்.
மேற்கூறிய இந்த பரிந்துரைகள் மக்களின் கோரிக்கைகள். வழக்கமாக மக்களின் முன்வைக்கப்படும் வாக்குறுதிகளையும், அவை செயல்களாக உருமாறுவதில் நேரும் பின்னடைவுகளையும் கருத்தில் கொண்டே டிரா மலேசியா தெளிவான திட்ட வரைவாக இந்த கோரிக்கைகளை முன்வத்துள்ளது.

இனி, இந்த பரிந்துரைகள் உரியவர் பார்வைக்கு சென்றடைவதிலும்; இவை சமூக மேம்பாட்டு திட்டங்களாக முன்னெடுக்கப்படுவதிலும் மக்களின் பங்கு மிக முக்கியமானது.

மாநிலம், கூட்டரசு ரீதியிலான தேர்தல்களில் முதல் தடவை வாக்களிப்பவர், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் தங்களுடைய ஓட்டுரிமையின் சக்தியை அறிந்து; அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாங்கள் தேர்தெடுக்கும் பிரதிநிதிகளிடம் தங்களுக்கான தேவைகளைக் கூறி அது அரசின் காதுகளை அடைவதையும் வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset