செய்திகள் மலேசியா
ஜொகூர் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டி: ரவீன்குமார் கெமெலே தொகுதியில் களமிறங்குகிறார்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் மஇகா நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தொகுதித் தேர்தல் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜூன் 27ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி மொத்தம் 56 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அத்தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.
ஜொகூர் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இப்பட்டியலை அறிவித்தார்.
அதன் அடிப்படையில் மஇகா நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கடந்த தவணையில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த ரவீன்குமார் கெமெலே தொகுதியில் போட்டியிடுகிறார்.
மாநில மஇகா தலைவரான அவரின் தொகுதி இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை அவர் தெங்காரோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரைத் தவிர்த்து கஹாங்கில் ருகேந்திரன், பெர்லிங்கில் பன்னீர் செல்வம், புக்கிட் பத்துவில் குமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
June 24, 2026, 3:16 pm
LRT3 ஜூன் 29 முதல் இயங்கத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
June 24, 2026, 3:15 pm
உயர் கல்வி மாணவி கொலைக்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்: போலிஸ்
June 24, 2026, 3:14 pm
