நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேலில் மகத்தான வெற்றி

மியாமி:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில்  ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.

மியாமி அரங்கில்  நடைபெற்ற சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில், ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.

இதில், போட்டியின் 7ஆவது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக  வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 48ஆவது நிமிட்ச்த்தில் வினிசியஸ் ஜூனியர் மற்றொரு கோலை போட்டார். 

இதனால், 2-0 என்ற புள்ளி கணக்கில் பிரேசில் வெற்றியை நோக்கி சென்றது. 

ஆட்டத்தின் தொடர்ந்து 60ஆவது நிமிடத்தில் மேத்யூஸ் குன்ஹா 3ஆவது கோலை போட்டார்.

அதன்பின்பு கோல்கள் அடிக்கப்படவில்லை. 

இதனால், உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் மொரக்கோ அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் ஹைத்தி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset