செய்திகள் விளையாட்டு
ஷெக்கினா பிஆர் தனது 15ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இளையோர் டென்னிஸ் போட்டிக்கு 15,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கியது: கிறிஸ்டபர் ராஜ்
பெட்டாலிங்ஜெயா:
ஷெக்கினா பிஆர் தனது 15ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இளையோர் டென்னிஸ் போட்டிக்கு 15,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கியது.
ஷெக்கினா பிஆர் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டபர் ராஜ் இதனை கூறினார்.
ஷெக்கினா பிஆர் இவ்வாண்டு தனது 15அவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
இதன் அடிப்படையில் 2026 சிஐஎம்பி பொது கேஎல் டென்னிஸ் சாம்பியன் போட்டியுடன் இணைந்து நடத்தப்படும் இளையோர் அளவிலான போட்டியான ஜூனியர் டென்னிஸ் போட்டிக்கு 15,000 ரிங்கிட் நிதியுதவி அளித்துள்ளது.
தேசிய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களிப்பதற்கான நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பே இந்த நிதியுதவியாகும்.
இந்த 15ஆவது ஆண்டு விழா ஷெக்கினா பிஆர் நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
ஆனால் அதைவிட முக்கியமாக, மலேசியாவில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் ஆற்றிய பங்கை மறுமதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பை இது எங்களுக்கு வழங்குகிறது.
இளம் விளையாட்டு வீரர்களில் முதலீடு செய்வது, நாட்டின் எதிர்காலத்தில் செய்யப்படும் முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம்.
அவர்களுக்குப் போட்டி அனுபவத்தை அளிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், மிக உயர்ந்த மட்டத்தில் வெற்றிபெறத் தேவையான மனநிலையை ஊட்டவும் இது போன்ற தளங்கள் அவசியமானவை.
ஷெக்கினா பி.ஆர் அந்தப் பயணத்தில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 12:01 pm
ஈரானிய கால்பந்து அணிக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது
June 24, 2026, 11:04 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பனமாவை வீழ்த்தியது குரோஷியா
June 24, 2026, 8:00 am
உலகக் கிண்ணம்: இங்கிலாந்து ஏமாற்றம்
June 24, 2026, 7:59 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5 கோல்களில் போர்த்துகல் வெற்றி
June 23, 2026, 9:11 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் முன்னேற்றம்
June 23, 2026, 9:08 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மெஸ்ஸி உலக சாதனை: அர்ஜெண்டினா வெற்றி
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 22, 2026, 8:22 am
