நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓன் ஹபிஸ் பெல்டாவிற்குள் நுழைவதைத் தடுக்க உத்தரவு இல்லை: அஹ்மத் ஜாஹித்

கோலாலம்பூர்:

பெல்டா பகுதிக்குள் நுழைய ஜொகூர் மந்திரி புசாருக்கு எந்த உத்தரவோ தடையோ விதிக்கப்படவில்லை.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

டத்தோ ஒன் ஹபீஸ் காஸி கூறுவது போன்ற அந்த நடவடிக்கைக்கு நான் உத்தரவிடவில்லை.

மேலும் பெல்டா பகுதிக்குள் நுழையுமாறு ஜொகூர் மந்திரி பெசாருக்கு நான் ஒருபோதும் உத்தரவிடவோ தடுக்கவோ இல்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக கடந்த வார இறுதியில், ஜொகூர் மாநில பெல்டா குடியேறிகள் தினம் 2026 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடியேறிகளுக்கு பட்டாக்களை ஒப்படைப்பதற்காக பெல்டா பகுதிக்குள் நுழைய தான் தடுக்கப்பட்டதாக ஒன் ஹபீஸ் நேற்று வெளிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset