செய்திகள் மலேசியா
செயற்கை நுண்ணறிவால் 697,000 பணியிடங்கள் ஆபத்தில் உள்ளன; மலேசியாவில் 42,807 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளது: மனிதவள அமைச்சர் ரமணன்
கோலாலம்பூர்:
தொழிலாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தத் தவறினால், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல்மயமாக்கல், பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றால் மலேசியாவில் 697,000 வேலைகள் கணிசமாகப் பாதிக்கப்படக்கூடும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் எச்சரித்துள்ளார்.
மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகள் எவ்வாறு தொழில்துறைகளை மறுவடிவமைக்கின்றன என்பதில் கவனம் செலுத்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நாட்டின் தொழிலாளர் சக்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து டேலன்ட் கார்ப்பரேஷன் மலேசியா பெர்ஹாட் (டேலன்ட்கார்ப்) ஓர் ஆய்வை நடத்தியதாக அவர் கூறினார்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தொழிலாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளாவிட்டால், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல்மயமாக்கல் , பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றால் 697,000 வேலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
"அதே நேரத்தில், 120 புதிய பதவிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன," என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில், வணிக நிறுவனங்கள் மூடப்படுவதாலும், ஆட்குறைப்பு செய்யப்படுவதாலும் ஏற்படும் வேலை இழப்புகளின் அதிகரிப்பு குறித்தும், தற்போதைய ஆட்குறைப்பு அலைக்கு தானியக்கமயமாக்கலும் செயற்கை நுண்ணறிவும் காரணமா என்பதைத் தெளிவுபடுத்தக் கோரியும் பதாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்மான் நஸ்ருதீன் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் தொழிலாளர்கள் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய, முக்கியத் திறன்களையும் வளர்ந்து வரும் பதவிகளையும் கண்டறிவதன் மூலம் மலேசியாவின் தொழிலாளர் சந்தை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தொழில்நுட்ப மாற்றத்தால் வேலையிழப்பு அபாயத்தில் உள்ள தொழிலாளர்களுக்காக, மறுதிறன், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக ரமணன் தெரிவித்தார்.
சோக்சோவின் (Socso) தரவுகளை மேற்கோள் காட்டி, மலேசியா தொடர்ந்து குறிப்பிடத்தக்க வேலை இழப்புகளைப் பதிவு செய்து வரும் நிலையில், 42,807 பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ள சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இவற்றில், 40.85 சதவிகிதம் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ததாலும் ஏற்பட்டவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கோலாலம்பூரில் அதிகபட்சமாக 12,844 வேலை இழப்புகளும், அதைத் தொடர்ந்து சிலாங்கூரில் 12,360 வேலை இழப்புகளும், ஜோகூரில் 3,468 வேலை இழப்புகளும் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
ஆட்குறைப்புகள் அதிகரித்த போதிலும், இதே காலகட்டத்தில் MYFutureJobs இணையதளம் 605,168 காலிப் பணியிடங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் வேலை தேடுபவர்களின் மொத்த எண்ணிக்கை 188,062 ஆக உள்ளது என்றும் ரமணன் விளக்கினார்.
செயற்கை நுண்ணறிவை (AI) வெறும் வேலை இழப்பாகக் கருதாமல், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு காரணியாகக் கருத வேண்டும் என்றும், கட்டமைக்கப்பட்ட பணியாளர் மாற்றத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 3:31 pm
பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
June 24, 2026, 3:15 pm
உயர் கல்வி மாணவி கொலைக்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்: போலிஸ்
June 24, 2026, 3:14 pm
தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினராக தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் வீரன் மறு நியமனம்
June 24, 2026, 2:14 pm
14 சிறந்த மாணவர்களுக்கு BYDPA உயரிய உதவித்தொகை வழங்கப்பட்டது
June 24, 2026, 11:30 am
3 ஆண்டுகளில் 5.37 பில்லியனை விழுங்கிய இணைய மோசடிகள்: மீட்கப்பட்டது வெறும் 10.9 மில்லியன் மட்டுமே
June 24, 2026, 11:07 am
