நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

32 கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது: ஓட்டுநர் காயமடைந்தார்

கூலிம்:

32 கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் இன்று ஜாலான் லெபு கே.டி.சி சாலையில் நிகழ்ந்தது என்று கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர் ஷம்சுல் சின்ரிங் கூறினார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் நடந்திருக்கலாம்.

சம்பந்தப்பட்ட பேருந்து தாமான் கே.டி.சி1லிருந்து கூலிம் ஹை டேக் பார்க் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

40 வயது மதிக்கத்தக்க ஒருவரால் ஓட்டப்பட்ட அந்தப் பேருந்து, சறுக்கி எதிர் திசைப் பாதைக்குள் சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருந்து ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டது, அவர் மேலதிக பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset