செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ தம்பிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு தந்தை மனம் திட்டம் அறிமுகம்; பி40 மாணவர்களுக்கு உதவி நிதி: சுரேன் கந்தா
பெட்டாலிங்ஜெயா:
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இன்று தந்தை மனம் திட்டம் அறிமுகம் கண்டது.
இத்திட்டத்தின் கீழ் எஸ்பிஎம் தேர்வில் 5ஏ-க்கு மேல் எடுக்கும் பி40 மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்படும் என்று அதன் இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.
இந்திய சமுதாயத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தோற்றுவிக்கப்பட்டது.
தற்போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு தற்போது 44 வயதாகிறது.
இந்த 44 ஆண்டுகளின் ஆயிரக்கணக்கான பட்டதாரி மாணவர்களை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவாக்கியுள்ளது.
இதற்கு எல்லாம் மூலக் காரணமாக இருந்து இந்திய சமுதாயத்தில் கல்வி புரட்சி ஏற்படுவதற்கு காரணமானவர் டான்ஸ்ரீ தம்பிராஜா.
கல்வி தந்தையான அவர் கடந்தாண்டு இறைவனடி சேர்ந்தார். இதனால் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அடுத்து என்னவாகும்.
அதன் நிலை என்ன என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது.
ஆனால் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தற்போது நாட்டில் மிகப் பெரிய கல்வி சக்தியாக உருவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இம்மையங்களில் இணைந்து படித்து வருகின்றனர்.
குறிப்பாக சமுதாயத்தில் எழும் கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறது.
இப்படி டான்ஸ்ரீ தம்பிராஜா விட்டுச் சென்ற கல்வி புரட்சியை நாங்கள் இன்று தொடர்ந்து வருகிறோம் என்று சுரேன் கந்தா கூறினார்.
இதனிடையே டான்ஸ்ரீ தம்பிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இன்று தந்தை மனம் திட்டம் அறிமுகம் கண்டது.
இத்திட்டத்தின் கீழ் எஸ்பிஎம் தேர்வில் 5ஏ-க்கு மேல் எடுக்கும் பி40 மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்படும்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும்.
பல நல்லுள்ளங்களின் ஆதரவுடன் இவாண்டும் 150,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 3,000 ரிங்கிட் வரை உதவி நிதி வழங்கப்படும் என்று சுரேன் கந்தா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 5:35 pm
