நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்களின் பாதுகாப்பு, மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு எடுத்து வருகிறது: ஃபட்லினா

ஜொகூர்பாரு:

மாணவர்களின் பாதுகாப்பு, மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு எடுத்து வருகிறது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

பள்ளிக் கட்டிடங்களிலிருந்து மாணவர்கள் கீழே விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும் பாதுகாப்பான பள்ளி மேலாண்மை வழிகாட்டுதல்களையும் மாணவர் பாதுகாப்புக் கொள்கைகளையும் எந்தவித சமரசமுமின்றி மேம்படுத்திச் செயல்படுத்த வேண்டும்.

மேலும், மாணவர்களின் மனநலப் பரிசோதனைகள் மூலமான தலையீடுகளும் செயல்படுத்தப்படும்.

நிகழும் ஒவ்வொரு வழக்கிலும் உண்மைகள் வேறுபடுகின்றன. இருப்பினும், நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, முழுப் பிரச்சினையையும் ஆராய்ந்துள்ளோம்.

இந்த நேரத்தில் மனநலப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

பள்ளி ஆலோசகர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

மேலும் உளவியல் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால், பள்ளி ஆலோசகர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.

நேற்று  ஈப்போவில் நடந்த சமீபத்திய சம்பவம் உட்பட, சமீபத்தில் பதிவான, மாணவர்கள் கட்டிடங்களிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

















தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset