செய்திகள் மலேசியா
சமுக உறவைகளை விளையாட்டு போட்டிகள் வலுப்படுத்துகின்றன: வின்சன்
தம்பூன்:
சமுக உறவுகளை வலுப்படுத்த வீளையாட்டுத் துறை பெரும் பங்காற்றுவதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் வின்சன் டேவிட் வலியுறுத்தினார்.
விளையாட்டுத் துறையில் ஈடுபடும் நபர்கள தங்கள ஆற்றலை மட்டும் வெளிப்படுத்த வில்லை மாறாக நல்ல உறவுகளை வளரத்துக் கொள்ளவும வகை செய்கிறது.
மஇகாவின் 80 ஆண்டு நிறைவையொட்டி தம்புன் தொகுதி காங்கிரஸ் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியை தொடக்கி வைத்து ஆற்றிய உறையூர் இதனை வலியுறுத்தினார்
புந்தோங்கில் உள்ள அருளொளி மண்டபத்தில் இப்போட்டி தம்புன் தொகுதி காங்கிரஸ் தலைவர் முனியாண்டி தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
அவர் மேலும் பேசுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
அதில் முதற்கட்டமாக நிகழ்வு கூட்டுப்பிராத்தனையுடன் தொடங்கியது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மஇகா உறுப்பினர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
எனினும், தம்பூன் தொகுதி வித்தியாசமான முறையில் பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம் அளித்து சிலம்பாட்ட நிகழ்ச்சியை நடத்தியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என அவர் கூறினார்.
சிலம்பம் என்பது இந்திய சமுதாயத்தின் தொன்மையான பாரம்பரிய தற்காப்புக் கலை என்றும், அந்தக் கலையை இன்றைய இளைஞர்களும் சிறுவர்களும் ஆர்வத்துடனும் திறமையுடனும் வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய நிகழ்வுகள் சமூக ஒற்றுமையையும் இளைஞர்களின் திறமைகளையும் வளர்க்க உதவுகின்றன.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த தம்பூன் தொகுதி தலைவர் முனியாண்டி, அவருடன் இணைந்து பணியாற்றிய கிளைத் தலைவர்கள், அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 11:37 am
பாதுகாப்புப் படை சீருடையில் ஆயுதத்துடன் சுற்றிய மர்ம நபர்: தீவிர விசாரணையில் களமிறங்கும் போலிஸ்
June 23, 2026, 10:46 am
கூலாயில் கோர விபத்து: 4 லாரிகள், 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன
June 23, 2026, 10:00 am
