நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி மடானி, மடானி தளவாடப் பொருட்கள் திட்டத்தின் கீழ் 50,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள்: டத்தோஸ்ரீ ரமணன்

ஜொகூர்பாரு:

கல்வி மடானி, மடானி தளவாடப் பொருட்கள் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 50,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மித்ராவின் இவ்விரு திட்டங்களுக்கான அறிமுக விழா இன்று ஜொகூர் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி, கற்றல் வசதிகளின் தரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 50,000 மாணவர்களுக்குப் பயனளிக்கும் மடானி தளவாடப் பொருட்கள் திட்டம், மடானி கல்வி திட்டம் அறிமுகம் கண்டன.

இதற்காக மொத்தம் 20.8 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாஆனி அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளில் உள்ள வசதிகளையும் கற்றல் சூழலையும் வலுப்படுத்துவதிலும், மாணவர்களின் கல்வி சாதனைகளை மேம்படுத்துவதிலும் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இணங்க இந்த முயற்சி அமைந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசாங்க உதவி பெறும் பள்ளிகள் பிரிவில் உள்ள 361 தமிழ்ப்பள்ளிகளுக்கு மடானி தளவாடப் பொருட்கள் திட்டத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் கல்வியமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட விவரக்குறிப்புகளின்படி, மாணவர்களுக்கான நாற்காலிகள், மேசைகள், ஆசிரியர் அறை மேசைகள், நாற்காலிகள், வகுப்பறைகள், வெண் பலகைகள், இரும்பு அலமாரிகள், சிற்றுண்டிச்சாலை மேசைகள், இருக்கைகள், கணினி மேசைகள்,  நெகிழி நாற்காலிகள்,  நிலை மின்விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படும்.

இதில் 39,692 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் 5,290 ஆசிரியர்களும் பயனடைகின்றனர்.

இதற்காக 12.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 315 தமிழ்ப்பள்ளிகளுக்கு பயனளிக்கும் கல்வி மடானி திட்டத்தின் காசோலையும் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு 8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யசெயல்படுத்துவதன்

இலவசப் பயிற்சி வகுப்புகள், கல்வி வழிகாட்டுதல், கல்விச் சிறப்புத் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கல்விச் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பல்வேறு கற்றல் ஆதரவு முயற்சிகள் செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் பி40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,410 மாணவர்கள் பயனடைவார்கள் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset