நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் அரசு 14 பில்லியன் ரிங்கிட்டை பங்களித்தாலும் மத்திய அரசிடமிருந்து 16 பில்லியன் ரிங்கிட்டை பெற்றுள்ளது: பிரதமர்

தங்காக்:

கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில அரசுக்கு வழங்கிய வருவாயுடன் ஒப்பிடுகையில், மத்திய அரசு ஜோஹோருக்கு அதிக ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை விளக்கினார்.

நிதி அமைச்சின் பதிவுகளின்படி, 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், ஜொகூர் மத்திய அரசுக்கு சுமார் 14 பில்லியன் ரிங்கிட் வருவாயை வழங்கியுள்ளது.

இருப்பினும், மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக ஒதுக்கீடுகள், அது தொடர்பான திட்டங்கள் மூலம் 16 பில்லியனை ரிங்கிட்டை ஜொகூருக்கே திருப்பி அனுப்பியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜொகூரின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் அர்ப்பணிப்பின் உண்மையான சித்திரத்தை வழங்க இந்த உண்மையை விளக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset