செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில தேர்தல் வேட்பாளர்களாக மஸ்லீ மாலிக், பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினரை நம்பிக்கை கூட்டணி அறிவித்தது
ஜொகூர்பாரு:
நம்பிக்கை கூட்டணி இன்றிரவு ஜொகூர் மாநில தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை அறிவித்தது.
இதில் முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக், பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன் அபு பக்கார், ஜொகூர் கெஅடிலான் இளைஞர் தலைவர் ஃபேசுடின் புவாட் ஆகியோர் அடங்குவர்.
மஸ்லீ மாலிக் புத்ரி வங்சா தொகுதியிலும், ஓன் செங்கராங்கில் வேட்பாளராகவும், ஃபேசுதின் கெம்பாஸில் போட்டியிடுவார்.
அதே வேளையில் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைஸான் கையாத் (அமானா) லார்கினில் போட்டியிடவுள்ளார்.
நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.
அமானா தலைவர் முகமது சாபு, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு ஜொகூரில் கூட்டணியின் வெற்றி முக்கியமானது என்று அந்தோனி லோக் கூறினார்.
டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராகத் தொடர வேண்டுமென்றால், ஜொகூரில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
மத்திய அரசின் முயற்சிகளால் மாநிலத்தின் பொருளாதாரம் ஓரளவு வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் கெஅடிலான் 20 இடங்களிலும், ஜசெக 17 இடங்களிலும், அமானா 19 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 11:10 pm
பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தேசியக் கூட்டணி கூட்டத்தில் டான்ஸ்ரீ மொஹைதின் கலந்து கொண்டார்
June 22, 2026, 10:55 pm
மத்திய அரசுக்கும், ஜொகூர் அரசுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகத் தொடர்கின்றன: பிரதமர்
June 22, 2026, 10:54 pm
எல்ஆர்டி 3 ஜூன் 29 அன்று அதிகாரப்பூர்வமாகத் தனது செயல்பாடுகளைத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
June 22, 2026, 6:08 pm
‘கழிவு அல்ல, வளம்’: தினமும் 39,000 டன்களுக்கும் மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் மலேசியா
June 22, 2026, 5:21 pm
மனநலப் பிரச்சினைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிறது: சுஹைசான் கயாத்
June 22, 2026, 4:19 pm
