செய்திகள் மலேசியா
மனநலப் பிரச்சினைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிறது: சுஹைசான் கயாத்
கோலாலம்பூர்:
மலேசியாவில் அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகள், நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. உரிய, பயனுள்ள தலையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், மனநலப் பிரச்சினைகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமை 2030-ஆம் ஆண்டுக்குள் 25.3 பில்லியன் ரிங்கிட்டை எட்டக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக்குழுத் தலைவர் சுஹைசான் கயாத், மனநலம் என்பது இனி மருத்துவத் துறையின் பிரச்சினை மட்டுமல்ல; அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தித்திறன், எதிர்கால மனிதவள வளமைக்கு நேரடி சவாலாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில் “மலேசியாவின் மனநல அமைப்பை வலுப்படுத்துதல்” குறித்த DR.4/2026 அறிக்கையை சமர்ப்பித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 16 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களிடையே மனச்சோர்வு (Depression) பாதிப்பு 2019-இல் 2.3 சதவீதமாக இருந்த நிலையில், 2023-இல் அது 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சுமார் 10 இலட்சம் மக்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
குழந்தைகள், இளையோரிடையே மனநலப் பாதிப்புகள் கவலைக்கிடமான அளவில் அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குழந்தைகளிடையே மனநலப் பிரச்சினைகள் 7.9% இலிருந்து 16.5% ஆக உயர்ந்துள்ளது. 13 முதல் 17 வயதுக்குட்பட்ட இளையோரில் நான்கு பேரில் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்.
“இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; நமது இளைய தலைமுறை எதிர்கொள்ளும் மனஅழுத்தங்களின் உண்மையான பிரதிபலிப்பாகும்,” என சுஹைசான் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மனநல ஆதரவு அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் நோக்கில், குழு 12 உத்திசார் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவசர மனநல உதவிக்கான தொலைபேசி சேவைகளின் திறனை விரிவுபடுத்துதல், மனநலத்தைச் சுற்றியுள்ள சமூகப் பாகுபாடுகள், தவறான கருத்துக்களை ஒழிக்கும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கங்களை முன்னெடுத்தல், மனநலச் செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மேலும் கடுமையாக்குதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளாக பார்க்கப்படுகின்றன.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 6:08 pm
‘கழிவு அல்ல, வளம்’: தினமும் 39,000 டன்களுக்கும் மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் மலேசியா
June 22, 2026, 4:19 pm
டீசல் விலை குறைந்தாலும் விவசாயிகளின் சுமை உடனே குறையாது: PeSAWAH எச்சரிக்கை
June 22, 2026, 4:08 pm
ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் 15 இடங்களில் போட்டியிடவுள்ளதாக பெர்சாமா கட்சி அறிவிப்பு
June 22, 2026, 1:39 pm
டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்
June 22, 2026, 1:38 pm
