நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தற்பெருமை காட்ட விரும்பும் ஜனரஞ்சக அரசியல்வாதிகளால் மக்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடாது: துங்கு இஸ்மாயில்

ஜொகூர்பாரு:

சமூக ஊடகங்களில் தற்பெருமை காட்ட விரும்பும் ஜனரஞ்சக அரசியல்வாதிகளால் எளிதில் பாதிக்கப்பட வேண்டாம்.

ஜொகூரின் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் மாநில மக்களுக்கு இதனை நினைவூட்டியுள்ளார்.

ஒரு தலைவரை, அவரது பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் மக்களுக்கு நன்மைகளைக் கொண்டுவரும் விதத்தின் அடிப்படையில் மக்கள் மதிப்பிட வேண்டும்.

அரசியல்வாதிகள் என்ற முறையில், மக்களுடன் ஈடுபாடு இருப்பதை உறுதிசெய்ய அவர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

மேலும் அவர்கள் கடினமாக உழைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதை நான் புரிந்துகொள்கிறேன்.

ஆகவே, எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், முதலில் ஒரு மதிப்பீடு செய்யுங்கள்.

நமது மாநிலத்தில் அதிக ஹாலிவுட் தன்மை கொண்டவர்கள் முவார் அருகே உள்ளனர். எனக்கு ஹாலிவுட் பிடிக்காது.

பணிகளைச் செய்து, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியவர்களையே நான் விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset