செய்திகள் மலேசியா
வணிக உரிமங்களைப் பெறுவதற்காக அந்நிய நாட்டினர் உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்யும் சம்பவங்கள் சிலாங்கூரில் தீவிரமடைந்து வருகின்றன
ஷாஆலம்:
வணிக உரிமங்களைப் பெறும் நோக்கத்திற்காக வெளிநாட்டினர், உள்ளூர் பெண்கள் சம்பந்தப்பட்ட போலித் திருமணங்கள் சிலாங்கூரில் தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு புதிய விஷயம் அல்ல. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடந்து வருவதாக நம்பப்படுகிறது.
சிலாங்கூர் உள்ளூராட்சி, சுற்றுலா துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ எங் சூயி லிம் கூறினார்.
அந்நிய நாட்டினர் வணிகம் செய்வதற்கும், நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கும் வழிவகுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே திருமணங்கள் செய்யப்படுகின்றன.
உள்ளூர் குடிமக்களாகவும் இருக்கும் தம்பதியரின் பெயரில் வணிக உரிமம் பெறப்படுவதால், இந்தச் செயல்முறை உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதைக் கடினமாக்கும் சவால்களில் ஒன்றாகும்.
அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, சம்பந்தப்பட்ட நபர்கள் தாங்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களின் வணிகங்களை நிர்வகிக்க மட்டுமே உதவுவதாகப் பெரும்பாலும் சாக்குப்போக்கு கூறுகின்றனர்.
உரிமம் செல்லுபடியாகும் நிலையிலும், ஒரு உள்ளூர் குடிமகனின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் ஒரு தர்மசங்கடத்தை எதிர்கொள்கிறோம்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 6:08 pm
‘கழிவு அல்ல, வளம்’: தினமும் 39,000 டன்களுக்கும் மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் மலேசியா
June 22, 2026, 5:21 pm
மனநலப் பிரச்சினைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிறது: சுஹைசான் கயாத்
June 22, 2026, 4:19 pm
டீசல் விலை குறைந்தாலும் விவசாயிகளின் சுமை உடனே குறையாது: PeSAWAH எச்சரிக்கை
June 22, 2026, 4:08 pm
ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் 15 இடங்களில் போட்டியிடவுள்ளதாக பெர்சாமா கட்சி அறிவிப்பு
June 22, 2026, 1:39 pm
டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்
June 22, 2026, 1:38 pm
