செய்திகள் மலேசியா
ஹம்ஸா மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்பதை சபாநாயகர் உறுதி செய்தார்
கோலாலம்பூர்:
லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், ஜூன் 18ஆம் தேதி முதல் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
இந்த விஷயத்தை அறிவித்த மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல்,
கடந்த கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட பல முன்னேற்றங்கள் மற்றும் புதிய தகவல்களைக் கருத்தில் கொண்டு, நிலையான விதி 4(ஏ) (3)-இன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும் டத்தோஸ்ரீ ஹம்ஸாவின் மறுநியமனத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.
தற்போது லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் 2026ஆம் தேதி ஜூன் 18 முதல் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
வாழ்த்துகள், லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 1:39 pm
டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்
June 22, 2026, 1:09 pm
ஆசியான் வழியாக ரோஹிங்யா பிரச்சினைக்கு தீர்வு காண மலேசியா–வங்காளதேசம் தீவிர முயற்சி
June 22, 2026, 11:09 am
புத்ராஜெயாவில் வங்காளதேச பிரதமருக்கு அரச வரவேற்பு
June 22, 2026, 8:27 am
பெர்சத்து கட்சி எப்போதுமே தேசியக் கூட்டணியில் நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
June 22, 2026, 8:26 am
ஜொகூர் தேர்தல்; கண்ணியமிக்க அரச நிறுவனத்தை அரசியல் பகடையாக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 22, 2026, 8:24 am
